Sunday, March 22, 2009

பொ. கருணாகரமூர்த்தி படைப்புக்கள்; - ஒரு பார்வை
சு. குணேஸ்வரன்…………….

புகலிடத்தில் எழுத்துப் பயணத்தை ஆரம்பித்தவர்களில் பொ. கருணாகரமூர்த்தி முக்கியமானவர். இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழ்ந்து வருகின்றார்.

இக்கட்டுரை கருணாகரமூர்த்தியின் ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ என்ற மூன்றுகுறுநாவல்களைக் கொண்ட தொகுப்பினையும்@ கிழக்கு நோக்கி சில மேகங்கள்> அவர்களுக்கென்று ஒரு குடில் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. இவை தவிர ‘பெர்லின் இரவுகள்’ என்ற கட்டுரை நூலும்> கூடு கலைதல் என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன.


எண்பதுகளில் தோற்றம் கொண்ட புலம்பெயர் இலக்கியத்தின் ஆரம்பகாலப் படைப்புக்களில் தாயக நினைவும் அதனோடு இணைந்த வாழ்வுச் சூழலுமே அதிகம் பதிவாகியிருந்தன. பின்னர் அவை படிப்படியாக வரித்துக் கொண்ட புதிய அநுபவங்களையும் புலம்பெயர் இலக்கியம் பேச முற்பட்டபோதே தமிழ்ப் படைப்புலகில் மிகுந்த கவனத்திற் கொள்ளப்பட்டன.

ஒரு அகதி உருவாகும் நேரம் (1994) என்ற குறுநாவல் ஊடாக தமிழகத்திலும் இலங்கையிலும் நன்கு அறியப்பட்ட பொ. கருணாகரமூர்த்தி தன் படைப்புக்களுக்கு வரித்துக் கொண்ட கதைக் கருக்கள் முக்கியமானவை.

1. புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்களின் செயற்பாடுகள்.
2. அந்நிய கலாசார சூழலில் தமிழ்ப் பண்பாட்டு மனம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்.
3. பெண்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் முரண்பாடுகள்.
4. போரினால் வாழ்வின் விளிம்பில் து}க்கி வீசப்பட்ட மானிட உணர்வுகள்;.
5. கர்மா பற்றிய விசாரணையும் வாழ்வும்.

வாழ்வு வசப்படும் என்ற குறுநாவல் ஜேர்மனிக்கு அகதியாய்ப் புலம்பெயர்ந்து ஒரே அறையில் வசித்து வரும் இளைஞர்களின் வெவ்வேறுபட்ட மனவுணர்வுகளையும் செயற்பாடுகளையும் சித்தாpக்கின்றது. ஒரு வகையில் ஜெயமோகன் கூறுவதுபோல்

‘ஏறத்தாள எல்லாக் கதாபாத்திரத்திலும் ஆசிரியர் சீராக ஒரு விஷயத்தை வைத்திருக்கிறார். கீழைத்தேய கலாசாரத்தில் வளர்ந்த மனிதர்கள் மேலைத்தேய கலாசாரத்தை எதிர்கொள்ளும் தத்தளிப்புதான் அது.’

இதனை பெண் நிலைப்பட்ட கதைகளிலும் சாp> பண்பாட்டு நெருக்குவாரத்தை சந்திக்கும் கதைகளிலும் சாp ஆசிரியர் முன்வைத்துள்ளார்.

பர்வதங்களும் பாதாளங்களும் என்ற கதையில் புலம்பெயர்ந்த தேசத்தில் வளர்ந்த பிள்ளைகளுடன் வாழும் ஒரு தாய்க்கு இருக்கக்கூடிய நியாயமான அச்சங்களை கருணாகரமூர்த்தி எடுத்துக் காட்டுவது கவனத்திற்குரியது.

“மனதை சபலிக்க வைக்கும் முத்தங்கள்> தழுவல்கள்> உரசல்கள் கலந்துள்ள டி.விப் படங்களை பார்க்கின்றனர். இரவில் பதினொன்றுக்குமேல் ஆர்.டி.எல். பிளசும் பார்ப்பார்களோ? அச்சமாயிருக்கு! இரண்டுங்கெட்டான் வயதில் உணர்ச்சி உத்வேகத்தால் தடுமாறும் சில பேதைகள்> தம்போல் இரட்டிப்பு வயதான ஆப்கானிஸ்தான் காரனுடனும்> சீக்கியனுடனும்> மூன்று பிள்ளைகளைப் பெற்ற அரபுக்காரனுடனும் அவசர முடிவெடுத்து ஓடிப்போகுதுகள்! கர்ப்பமாகி அவர்கள் திரும்பி வருவதைப் பார்த்து பதைக்கும் பெற்றோரைப் பார்க்கவே முடிவதில்லை! பரிதாபமாயிருக்கு! பள்ளித் தோழர்களால் கர்ப்பமாகும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகாpக்கின்றது. அதிர்ச்சியாகவுள்ளது.” (கிழக்கு நோக்கி சில மேகங்கள்> ப.107)


பெண்நிலைப்பட்ட கதைகளில் அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் முரண்பாடுகள் தனித்த பார்வைக்குரியன. இவரின் கதைகளில் வரும் பெண்கள் நவீனத்துவத்தின் சாயலே படியாத குக்கிராமத்திலிருந்து (அக்கரையில் ஒரு கிராமம்) பெண்ணியச் சிந்தனைகளைப் பேசும் (பால்வீதி) துணிச்சலான பெண்வரை உள்ளனர்.

இந்தப் பெண்களை மூன்று வகையாக நோக்கலாம். மாற்றத்தை அறியாத பெண்> ஒத்துப்போகும் பெண்> துணிச்சலான பெண்> என்ற வகையில் எடுத்துக் கூறலாம். மற்றெல்லாவற்றையும் விட பாலியல் ரீதியில் பெண் சுரண்டலுக்கு உட்படுதலை மிக நுண்மையாக எடுத்துக் காட்டுகின்றார். இவற்றுக்கு ஆவுரஞ்சிகள்> ஸ்பொன்சர் தாத்தாக்களும் ஏற்பாட்டு மாமாக்களும்> வண்ணத்துப் பூச்சியுடன் வாழ முற்படல்> பேதையல்ல பெண்> ஆகிய கதைகளைக் குறிப்பிடலாம்.

ஆவுரஞ்சிகளில் வரும் பென்சனியர் சமூகத்தில் தன்னைப் பெரிய மனிதராகக் காட்டிக்கொண்டு செய்கின்ற நடத்தைப் பிறழ்வுகளில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக சிங்களப் பெண்கள் பற்றிய சித்தாpப்பு புலம்பெயர் இலக்கியத்தில் மிக அரிதாகவே கூறப்பட்டுள்ளது. அதனை பொ. கருணாகரமூர்த்தி ஸ்பொன்சர் தாத்தாக்களும் ஏற்பாட்டு மாமாக்களும் கதையில் எடுத்துக் காட்டியுள்ளார்.

வண்ணத்துப் பூச்சியுடன் வாழ முற்படல் என்ற கதையில் தாய்லாந்தில் இருந்து இளைஞர் ஒருவரால் அழைத்து வரப்படும் பெண்ணும் கூட முடிவில் அவனிடமிருந்து விலகி இன்னோர் வடிவத்தில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாதல் சித்தாpக்கப்பட்டுள்ளது.

போரால் வாழ்வின் விளிம்புக்கு து}க்கி வீசப்பட்ட மாந்தர்களின் உணர்வினைப் பேசும் படைப்புக்களும் கவனத்திற்குரியன. இனப்போராட்ட சூழலில் யாழ்ப்பாணத்தில் பெரும் இடப்பெயர்வின்போது மக்கள் சந்திக்கின்ற இன்னல்கள் சோகம் ததும்ப அவர்களுக்கென்று ஒரு குடில் என்ற கதையில் காட்டப்படுவதிலிருந்து> ஜேர்மனிய தெருக்களில் அலையும் வாழ்வைத் தொலைத்த மாந்தர் வரை கருணாகரமூர்த்தியின் கதைகளின் தளம் விரிகின்றது.

ஒரு அகதி உருவாகும் நேரம் குறுநாவலில் வரும் சட்;டநாதன் இறுதிவரை வாழ்வின் ஏமாற்றங்களுடனேயே வருதல் உள்@ர மனத்தில் அமுங்கிய சோகத்தையே வரவழைக்கி;ன்றது. இதனைத் தனியே இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கதையாக மட்டுமல்லாமல் உலகப் பொதுமை பெறும் அளவில் நசிபடும் மானிடர்களின் அவலமாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டாம் உலகப்போரின் வடுக்களில் இருந்து இன்னமும் மீளமுடியாத மூதாட்டியும் இனவாதத்தால் தோற்கடிக்கப்பட்ட சுண்டெலி கதாபாத்திரமும் தெருப்பாடகனாக அலைந்து திரியும் ஏழைக்கலைஞனும் கூட வாழ்வின் விளிம்புக்கு து}ரவீசப்பட்ட மாந்தர்களே.

அதுமட்டுமல்லாமல்> இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள்> பிறதேசங்களின் ஒடுக்குமுறையிலிருந்து தஞ்சமடைந்த துருக்கியர்> பாகிஸ்தானியர் ஆகியோருடன் பக்கத்து பக்கத்து வீடுகளில் முரண்பட்டு வாழ்கின்றபோதிலும்> இறுதியில் அவர்களும் கூட அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட நிலையில் அந்நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படும்போது பிரச்சனையின் கனம் ஒன்றாகத்தான் உள்ளது.

இது இன்றைய புலம்பெயர் இலக்கியம் சர்வதேசிய மானிடர்களின் அனுபவங்களையும் பேசும் அளவிற்குத் தனது எல்லைகளை விரித்துக் கொண்டமைக்குச் சான்றாக அமைகின்றது.

அறிவுக்கும் ஆத்மிகத்திற்கும் இடையிலான உரையாடலாக அமையும் பால்வீதி> போதிமரம்> ஒரு கிண்டர்கார்டன் குழந்தையின் ஆத்ம விசாரணை ஆகிய கதைகளில் கர்மா பற்றிய விசாரணை உள்ளது. மனித சமூகத்தையே ஆட்டுவிக்கும் இன்னல்களுக்கு கர்மாவே காரணம் என்பதைக் கதைகளில் சுட்டும் கருணாகரமூர்த்தி பல சிந்தனைகளை முன்வைக்கின்றார். ஆனால் ‘விடுதலைக்குப் போராடும் யாருக்கும் மனதளவில் பெருந்தடையாக கர்மாக் கோட்பாடே நிற்கும்’ எனக் கூறும் கவிஞர் இன்குலாப்பின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே.

எமது மதங்கள் பாரம்பரியமாகக் கட்டிக் காத்துவரும் கருத்துக்களுக்கும் வாழ்வியலுக்கும் இடையில் நிரம்ப முரண்பாடுகள் உண்டு. இதனை எடுத்துக் காட்டுவதில் கருணாகரமூர்த்தி விடைகூறமுடியாத தருணங்களும் உண்டு. அவற்றை மையப்படுத்தியும் மேற்குறிப்பிட்ட கதைகள் அமைந்துள்ளன.

தனக்கேயுரிய பாணியில் கதைகூறும் ஆசிரியர் கதைக்களத்திற்கு ஏற்ப சில கதைகளில் மொழியை செம்மையாகக் கையாண்டுள்ளார். வடிவச் சிறப்புமிக்க பல கதைகளைத் தமிழுக்குத் தந்திருக்கும் கருணாகரமூர்த்தியின் படைப்புகள் புனைகதை உலகிற்கு வளம் சேர்க்கக்கூடியவை. குறிப்பாக தமிழர்தம் பண்பாட்டுப் பெறுமானங்கள் அந்நிய கலாசாரத்தில் திசைமாறிச் செல்லும் அபத்தநிலையையும்> நசிபடும் மானிடங்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் சர்வதேசிய பொதுமை பெறும் பல கதைகளையும் தந்துள்ள வகையில் கணிப்பிற்குரிய படைப்பாளியாக பொ. கருணாகரமூர்த்தி திகழ்கின்றார் எனலாம்.

3 comments:

 1. // மனித சமூகத்தையே ஆட்டுவிக்கும் இன்னல்களுக்கு கர்மாவே காரணம் என்பதைக் கதைகளில் சுட்டும் கருணாகரமூர்த்தி //

  சுட்டவில்லை. தீர்மானமாகவல்ல. அதை ஒரு விசாரமாகவே என் படைப்புகளில் வைத்துள்ளேன்.
  நன்றி.

  பொ.கருணாகரமூர்த்தி.பெர்லின்.

  ReplyDelete
 2. விசாரமாகவே நீங்கள் அதை முன்வைத்தாலும் சில சந்தர்ப்பங்களில் யோசிக்கும்போது சரியெனவே தோன்றுகிறது. தங்கள் தொடர்புக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களின் புதிய நூலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  சு.குணேஸ்வரன்
  (துவாரகன்)

  ReplyDelete
 3. இன்று தான் உங்கள் வலைப்பதிவுகளிற்கு முதன் முதல் வருகிறேன். நன்றாக இருக்கின்றது.

  கருணாகரமூர்த்தியின் எழுத்துகளில் சில இடங்களில் முரண்பட்டாலும், புலம்பெயர் எழுத்தாளர்களில் அதிகம் சுவாரசியாமான நடை வாய்த்திருப்பது என்னவோ அவருக்குத்தான்.

  சென்ற ஆண்டு அவர் கனடா வந்திருந்தபோது க. நவம் “அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை வாசித்தால் கொடுப்புக்குள் சிரிப்பு வரும், பொ. கருணாகரமூர்த்தியின் எழுத்துக்களை வாசித்தால் கொல்லென்று சிரிப்பு வரும்” என்றூ சொன்னது குறிப்பிடத்தக்கது

  ReplyDelete