Sunday, March 22, 2009

ஆசி. கந்தராஜாவின் படைப்புலகம்

சு. குணேஸ்வரன்……………………..

புலம்பெயர்ந்தோரின் படைப்பிலக்கியச் சூழலிலே இடையிடையே மின்னல் அடித்தாற்போல் சில நல்ல தொகுப்புக்கள் காணக்கிடைக்கின்றன. அந்த வகையில் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஆசி. கந்தராஜா என அறியப்பட்ட படைப்பாளியின் ‘பாலனை பேசலன்றி’> ‘உயரப் பறக்கும் காகங்கள்’> ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் அண்மைக் காலத்தில் வெளிவந்துள்ளன.

ஆசி. கந்தராஜா அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தாலும் தனது தொழிலின் நிமித்தம் உலகின் பல பாகங்களுக்கும் பயணப்பட்டுள்ளார். அதன்மூலம் தான் தாpசித்த தாpசனங்களைத் தனது கதைகளுக்குப் பகைப்புலமாகக் கொண்டுள்ளார். ஈழம்> அவுஸ்திரேலியச் சூழல் தவிர வங்காளதேசம்> சீனா> வியட்நாம்> கொரியா> ஜேர்மனி> ஆபிரிக்கா> யப்பான்> ஆகிய நாடுகளின் தாpசனங்களைக் களங்களாகக் கொண்டு மொத்தம் 20 கதைகளை இரண்டு தொகுதிகளிலும் தந்துள்ளார்.

மிகப் பரந்த ஒரு புறவுலகச் சித்தாpப்பின் ஊடாக கதை சொல்லியாகத் திகழும் அ. முத்துலிங்கம் ஈழத்தமிழ் வாசகன் இதுவரை சந்தித்திராத பல களங்களை தனது கதைகளில் முன்வைக்கின்றார். அதன் தொடர்ச்சியாக பல களங்களை ஆசி. கந்தராஜாவின் கதைகளில் தாpசிக்க முடிகின்றது.

ஈழச் சூழலை மையப்படுத்திய மூன்று கதைகள் தவிர ஏனையவை அவுஸ்திரேலிய தமிழ்ச் சூழலில் ஏற்பட்ட அநுபவங்களையும்> தொழிலின் நிமித்தம் பிற நாடுகளுக்குப் பயணப்பட்டபோது பெற்ற புதிய அநுபவங்களையும் தரும் கதைகளாக உள்ளன. பொதுவாக இவரின் கதைகள்

1. ஆண் பெண் உறவுநிலை குறித்த சிக்கல்களையும்
2. போலி வாழ்வின் பொய்மைகளையும்
3. புதிய களங்களில் கிடைத்த அநுபவங்களையும்
4. தனித்து விடப்பட்ட முதுமையின் தனிமை உணர்வுகளையும்

கதைக் கருக்களாகக் கொண்டு அமைந்துள்ளன. ஆனாலும் மிகச் சிறப்பாகப் பேசக்கூடிய அளவுக்கு ஆண் பெண் உறவுநிலை குறித்த கதைகள் அமைந்துள்ளன. அவை தமிழ்ச் சூழலிலும் பல்கலாசாரச் சூழலிலும் காதல் மற்றும் திருமண உறவு குறித்த சிக்கல்களை எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன.


அம்மா பையன்> அடிவானம்> ஒட்டுக் கன்றுகளின் காலம்> உயரப் பறக்கும் காகங்கள்> வெள்ளிக்கிழமை விரதம்> துர்க்கா தாண்டவம்> ஆகிய கதைகள் மேற்கூறிய ஆண் பெண் உறவுநிலை குறித்துப் பேசுகின்றன.

புலமைப் பரிசில் பெற்று ஜேர்மனிக்குப் படிப்பின் நிமித்தம் சென்றபோது வியட்நாமிய பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பும் பிரிவும்> நீண்ட காலங்களின் பின்

“புத்திஜீவி என்ற மமதையிலே மானிட தர்மங்களை மறந்த ஒருவரை என் தந்தை என்று அடையாளப்படுத்த நான் விரும்பவில்லை. கிம்மின் மகனாகவும் வியட்நாம் குடிமகனாகவும் வாழ்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.”

என முகத்தில் அடித்தாற்போல் சந்ததி வழியாகக் கேட்க முடிகின்ற குரலை ‘அம்மா பையன்’ என்ற கதை காட்டுகின்றது.

மேலைத்தேய குடும்ப வாழ்வில் தன் கணவனிடம் இருந்து விவாகரத்துப் பெற்றுச் செல்ல விரும்பும் ஜேர்மனியப் பெண்ணும் தமிழ்ச் சூழலில் கணவன் எவ்வளவுதான் கொடுமையானவனாக இருந்தாலும் சேர்ந்து வாழ விரும்பும் தமிழ்ப் பெண்ணின் மனமாற்றமும் அடிவானம் என்ற கதையில் எடுத்துக் காட்டப்படுகிறது.

ஆபிரிக்க தேசத்தில் ‘மணப்பெண் கூலி’ கொடுத்து ஆண்கள் திருமணம் செய்யும் கலாசாரத்திலே காதலர்கள் தமது திருமண பந்தத்திற்காகப் பணம் சேர்க்கிறார்கள். அதில் பெண்> தான் உடலால் சோரம் போனாலும் உள்ளத்தால் தன் காதலை இழக்காத பெருமை ‘வெள்ளிக்கிழமை விரதம்’ என்ற கதையில் எடுத்துக் காட்டப்படுகிறது. ஒரு வகையில் புதுமைப்பித்தனின் பொன்னகரத்தை ஞாபகப்டுத்தினாலும் ஆபிரிக்க கலாசாரத்தின் சில பக்கங்களை அறிய வைக்கிறது.

இவ்வாறான ஆண் பெண் உறவுநிலை குறித்த கதைகளிலே எமது தமிழ் மரபுச்சூழலையும் பிற நாடுகளின் கலாசாரச் சூழலையும் கொண்டு வந்து நிறுத்துவதன் மூலம் பல கருத்துக்களை தனது கதைகளின் ஊடாக கேள்விக்கு உட்படுத்துகின்றார்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களில் பலர் தமது போலிப் பெருமைகளையும் பழக்க வழக்கங்களையும் இன்னமும் விட்டுவிட முடியாமல் ஒவ்வொருவரும் மற்றவரை ஏமாற்ற போலி முகங்களுடன் வாழ்ந்து வருவதை காலமும் களமும்> முன்னிரவு மயக்கங்கள்> பாவனை பேசலன்றி> ஆகிய கதைகளில் எள்ளல் தொனிக்க சிறப்பாகக் கூறியுள்ளார்.

தொழில் காரணமாக சென்ற இடங்களில் தாpசித்த அநுபவங்களைப் பல கதைகளில் எடுத்துக் காட்டுகின்றார். அதில் ஒரு கதை வேகமான தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக யப்பான் தேசம் பற்றிய எமது கருத்தியலை கேள்விக்கு உட்படுத்துகின்றது. அங்கும்கூட ஓர் இருண்ட பக்கம் ‘தேன் சுவைக்காத தேனீக்கள்’ என்ற கதையூடாக எடுத்துக் காட்டப்படுகிறது. பல நெருக்கடிகளுக்கு மத்தியில் படித்து பரீட்சையில் வெற்றிபெற முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சிறுமியின் நிலை மானிட நேயமுள்ள எவரையும் உலுப்பி விடக்; கூடியது. மரணத்துக்கு யப்பான் தேசத்தினர் கொடுக்கும் முக்கியத்துவமும்> இக்கதையில் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது.

ஆசி. கந்தராஜாவின் கதைகளில் சமூகத்தால் தனி;த்து விடப்பட்ட பாத்திரங்களின் உணர்வுக் கோலங்கள் இன்னுமோர் முக்கியமான கூறாகும்.

யாழ்ப்பாணத்துச் சூழலில் தனித்துப் போன பூமணி ரீச்சர்> அவுஸ்திரேலிய தமிழ்ச் சூழலில் தனித்துப் போன சின்னத்துரை வாத்தியார்> கணவன் இறந்த பின் வீட்டையும் பங்குபோட்டு பிள்ளைகளால் தனித்து விடப்பட்ட பார்வதியம்மா> ஆகிய பாத்திரங்கள் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வோட்டக் கூறுகளுக்கு முகங்கொடுக்க மாட்டாமல் தனித்துப்போனவர்கள். அவர்களின் உள்ளங்களில் ஒளிந்திருக்கும் பல கதைகளை பாத்திரங்களின் மெளனங்களின் ஊடாக உணர்த்தி விடுகின்றார்.

இங்கு கூறப்பட்ட எல்லாக் கதைகளிலுமே குறைந்த பட்சம் மானிட நேயமுள்ள ஒரு மனிதன் உலா வருகின்றான்.

“ஒரு நீளும் கை கந்தராஜாவின் வார்த்தைகளுக்கு முளைத்;து விடுகிறது. அந்தக்கை நம் தோளைத் தொடுகிறது. தொட்டு நம் கவனத்தை அவர் சொல்லும் விஷயத்தின் பக்கம் நகர்த்துகிறது. உணர்வு கொப்பளிக்க ஆனால் உரக்கச் சத்தம் போடாத நளினம் ஆசிரியருக்கு கைவந்து விடுகிறது. இதுதான் அவரைத் தனித்துவப்படுத்துகிறது. சாதாரண சொற்கள் சத்தியத்தில் நனைந்து விடுகின்றன. எனக்கு கதைகளைக் காட்டிலும் கதைக்குப் பின்னால் இருக்கும் ஆத்மா முக்கியமாகப் படுகின்றது.”

என்று பிரபஞ்சன் கூறுவது கவனிக்கத் தக்கது.

இலாவகமான நடை> கோட்பாடுகளைப் போட்டுக் குழப்பாத நிலை> கதைக்குத் தேவையான நகர்வு> எல்லாம் சேர்ந்து கதைகளை சுவாரசிமாக படிக்க வைக்கின்றது.

ஆனால் இன்றைய புலம்பெயர் இலக்கியப் படைப்புலகிலே பார்த்திபன்> பொ. கருணாகரமூர்த்தி> கலாமோகன் போன்ற படைப்பாளிகள் காட்டும் படைப்புலகம் ஆசி. கந்தராஜாவின் கதைகளில் இருந்து வேறுபடுகிறது. அந்த வேறுபாடுகள் உலக அரங்கில் இன்று பேசப்படும் அகதிநிலை தொடங்கி கலாசார அந்நியமாக்கல் வரை நகர்ந்து கதைகளுக்குப் புதிய கருக்களை எடுத்துக் காட்டுகின்றது. இவை எல்லாவற்றையும் ஒன்றுபடுத்தியே ஈழத்தமிழாpன் புலம்பெயர் இலக்கியம் என்பதனை அடையாளப்படுத்த முடியும். அதற்கு வலுச்சேர்க்க ஆசி. கந்தராஜாவின் கதைகளும் இன்னமும் புதிய களங்களை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment